×

காரைக்குடி - கன்னியாகுமரி இடையே ரயில் பாதை அமைக்கும் திட்டம் சாத்தியமற்றது; மக்களவையில் ரயில்வே அமைச்சகம் தகவல்

டெல்லி: காரைக்குடி - கன்னியாகுமரி இடையே கிழக்கு கடற்கரை ரயில் பாதை அமைக்கும் திட்டம் நிதி ரீதியாக சாத்தியமற்றது என்று மத்திய ரயில்வே அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. காரைக்குடி - கன்னியாகுமரி இடையே கிழக்கு கடற்கரை ரயில் பாதை அமைக்கும் திட்டம் நிதி ரீதியாக சாத்தியமற்றது என்று மத்திய ரயில்வே அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் எழுப்பிய கேள்விக்கு மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதிலளித்தார்.

இதன்படி, காரைக்குடி முதல் கன்னியாகுமரி வரையிலான ரயில்பாதை  ராமநாதபுரம், தூத்துக்குடி வழியாக கடலோரப் பகுதிகளை இணைக்கும் திட்டத்திற்கு கடந்த 2011ல் 2 பகுதிகளாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகவும், நிதி ரீதியாக இந்த திட்டம் சாத்தியமற்றது என்பதால் அதை மத்திய ரயில்வே அமைச்சகம்  முன்னெடுத்துச் செல்ல முடியவில்லை என்றும் அவர் பதிலளித்துள்ளார்.

Tags : Karakudi - Kannyakumari ,Ministry of Railways , The plan to build a railway line between Karaikudi and Kanyakumari is impossible; Information of the Ministry of Railways in the Lok Sabha
× RELATED தேவைக்கு ஏற்ப போதிய சேவை இல்லாததே...