×

தா.பழூர் அருகே அரசு பேருந்தில் தொங்கியபடி மாணவர்கள் ஆபத்து பயணம்-நடவடிக்கை எடுக்கப்படுமா?

தா.பழூர் : அரியலூர் மாவட்டம் தா.பழூர் சுற்றியுள்ள பகுதிகளில் பேருந்துகளின் படிக்கட்டு மற்றும் பின்பக்க ஏணிகளில் தொங்கியபடி மாணவர்கள் ஆபத்தான பயணம் மேற்கொள்வதை தடுக்க கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தா.பழூரிலிருந்து சுத்தமல்லி செல்லும் வழித்தடத்தில் அரசு பேருந்துகளில் தினமும் காலை பள்ளிக்கு சென்று விட்டு மாலையில் மீண்டும் அரசு பேருந்தில் வீடு திரும்புகின்றனர்.

இந்நிலையில் மாணவர்களுக்கு போதுமான அளவிற்கு பேருந்துகள் இயக்கப்படாததால் மாணவர்கள் ஆபத்தான பயணங்களை மேற்கொள்ள வேண்டி உள்ளதாக மாணவர்களின் பெற்றோர்கள் கூறுகின்றனர். சுத்தமல்லி வழித்தடத்தில் அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதில் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் அரசு பேருந்தை நம்பியே பயணம் மேற்கொள்ள வேண்டி உள்ளது.

போதுமான பேருந்துகள் இல்லாததால் மாணவர்கள் பேருந்து படிக்கட்டுகளில் தொங்கியபடியும், பின்பக்க ஏணிகளில் தொங்கி கொண்டு உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் பயணம் செய்கின்றனர். மேலும் பள்ளி மாணவர்களின் எதிர்கால நலன் கருதியும், பெரும் விபத்துக்கள் ஏற்படுவதற்கு முன் மேற்கண்ட வழித்தடத்தில் பள்ளி நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Dhaka , Dhaka: Ariyalur district: Dangerous for students to hang on the stairs and rear ladders of buses in and around Dhaka
× RELATED வங்கதேசத்துக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றதாக சேலையூர் எஸ்.ஐ. கைது!!