×

குந்தா பகுதியில் அட்டகாசம் செய்த குரங்குகள் கூண்டு வைத்து பிடிக்கப்பட்டது

மஞ்சூர் : குந்தா பகுதியில் அட்டகாசம் செய்த 30க்கும் மேற்பட்ட குரங்குகளை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர். நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ளது குந்தாபாலம். நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் இந்த பகுதியில் தேயிலை விவசாயத்துடன் பட்டானி, பீன்ஸ், அவரை, உருளைக்கிழங்கு, கேரட் உள்ளிட்ட பல வகையிலான மலைகாய்கறிகளை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர்.

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக இப்பகுதிகளில் நூற்றுக்கணக்கான குரங்குகள் முற்றுகையிட்டு பெரும் அட்டகாசத்தில் ஈடுபட்டு வந்தது. விவசாய விளைநிலங்களில் புகுந்து பயிர் செடிகளை பிடுங்கி பெரும் நாசம் செய்ததுடன் இப்பகுதிகளில் திறந்து கிடக்கும் வீடுகளில் புகுந்து தின்பண்டங்களை தூக்கி செல்வதும், பொருட்களை வாரியிறைப்பதும் வாடிக்கையாக இருந்தது.

குரங்குகளின் அட்டகாசம் நாளுக்குநாள் அதிகரித்து வந்தது இப்பகுதி பொதுமக்களை கடும் அதிருப்திகுள்ளாக்கியது. இதையடுத்து அட்டகாசம் செய்து வரும் குரங்குகளை கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதியில் கொண்டு விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதைத்தொடர்ந்து, வனத்துறை சார்பில் குரங்குகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக, குந்தா பகுதியில் இரும்பு கூண்டுகள் வைக்கப்பட்டன. இந்த கூண்டுகளில் வைக்கப்பட்டிருந்த தின்பண்டங்களால் கவரப்பட்ட குரங்குகள் ஒவ்வொன்றாக கூண்டுக்குள் சிக்கியது. சுமார் 30க்கும் மேற்பட்ட குரங்குகள் கூண்டுக்குள் பிடிபட்டதை தொடர்ந்து வனத்துறையினர் தனியார் வாகனம் மூலம் கொண்டு சென்று தொலை துாரமுள்ள அப்பர்பவானி வனப்பகுதியில் விடுவித்தனர்.

Tags : Kunda , Manzoor: More than 30 monkeys have been captured by the forest department in the Kunda area. Near Manjur in the Nilgiris District
× RELATED குந்தா சுற்று வட்டார பகுதியில்...