×

பாஜக தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு.. என்ஐஏ விசாரணை நடத்த வேண்டும் :மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி

சென்னை : சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு நடந்த இடத்தை மாநில தலைவர் அண்ணாமலை இன்று காலை பார்வையிட்டு ஆய்வு செய்தார். சம்பவம் குறித்து அங்கிருந்தவர்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து அண்ணாமலை அளித்த பேட்டி: பாஜக தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தை பார்க்கும் போது எங்களுக்கு சந்தேகம் வருகிறது. நீட் தேர்வு ஆதரவு நிலைப்பாட்டை எதிர்த்து குண்டை வீசியிருக்கிறார் என்று காவல்துறை சார்பில் கூறியிருக்கிறார்கள். இந்த காரணம் கேட்பதற்கு மிகவும் நகைக்சுவையாக இருக்கிறது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் அவர்களாக செய்யவில்லை. யாரோ சொல்லி தான் செய்து இருக்கிறார்கள்.

குண்டு வீசியவருக்கு நீட் என்றால் என்ன அர்த்தம் என்று தெரியுமா? என்று தெரியவில்லை. அதனால்,  அவர் பாஜகவின் நீட் நிலைப்பாட்டை எதிர்த்து குண்டு வீசினார் என்று சொல்வதை யாரேனும்  ஏற்று கொள்வார்களா?. அடுத்து கைது செய்யப்பட்டவர் டாஸ்மாக் வேண்டாம்? என்று டாஸ்மாக்கில் குண்டு வீசினார் என்று சொல்கிறது. இது ஒரு சினிமா கிளைமேக்ஸ் போன்று உள்ளது.இது போன்ற சம்பவங்கள் எங்கள் உறுதியை  குலைக்காது. டெல்லியில் உள்ள பாஜக அகில இந்திய பாஜக தலைவர்கள் அனைவரும் இந்த விஷயத்தை மிகுந்த கவனத்தோடும், சீரியஸாக பார்க்கிறார்கள்.



Tags : BJP ,NIA ,president ,Annamalai , அண்ணாமலை,பாஜக , டாஸ்மாக்
× RELATED தமிழ்நாடு பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் மாநில தலைவர் அண்ணாமலை!