×

கல்வி நிறுவனங்கள் மதத்தை காட்டுவதற்கு அல்ல.. : ஹிஜாப் விவகாரம் பற்றி பாஜக நிர்வாகி குஷ்பு கருத்து

சென்னை :  கர்நாடக கடலோர பகுதியில் உள்ள உடுப்பி மாவட்டத்தில் சிறுபான்மை வகுப்பை சேர்ந்த மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு தடை விதித்து கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவிகள் போராட்டம் நடத்தினர். இதனிடையில் ஹிஜாப் அணிய தடை விதிக்க வேண்டும். இல்லையெனில் நாங்கள் காவி சால்வை அணிவோம் என்று சில கல்லூரிகளில் காவி சால்வை அணிந்து மாணவர்கள் வந்தனர்.இதையடுத்து கர்நாடகாவில் மாணவ, மாணவிகள் ஹிஜாப் மற்றும் காவி சால்வை அணியும் பிரச்னை போராட்டம் கலவரமாக மாறியது.

இந்த சம்பவம் தொடர்பாக பாஜக நிர்வாகி நடிகை குஷ்பு வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், கல்வி என்பது மதத்தை பற்றியது கிடையாது மாறாக சமத்துவத்தை சார்ந்தது. பள்ளிக்கு சீருடை அணிந்து செல்ல வேண்டும். ரூல்ஸ் என்பது எல்லோருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். கல்வி மையங்கள் என்பது உங்கள் மதத்தை காட்டும் இடம் கிடையாது. கல்விக்கூடம் என்பது ஒரு இந்தியராக நீங்கள் வலிமையாக காட்ட வேண்டிய இடம். இதை வைத்து அரசியல் செய்யும் நபர்கள் அவமானகரமானவர்கள்.

நம் பள்ளி நாட்களில் எப்படி இருந்தோமோ, அதே போல் ஒன்றாக இருப்போம். என் பள்ளி நாட்களில் சீருடையைத் தவிர வேறு எதையும் அணிந்த குழந்தைகளை பார்த்ததில்லை. என் குழந்தைகள் பள்ளியில் படிக்கும் போது கூட அப்படி இல்லை. உங்கள் மதத்தை உங்கள் பேட்ஜாக பள்ளிக்கு அணிய வேண்டும் என்ற இந்த திடீர் தூண்டுதல் ஏன்? பள்ளிகளுக்கு விதிகள் இல்லையா?, எனத் தெரிவித்துள்ளார்.


Tags : Bajaba ,Kushbu , ஹிஜாப் ,பாஜக, நிர்வாகி ,குஷ்பு ,கருத்து
× RELATED தேர்தல் பிரசாரத்தில் இருந்து நடிகை குஷ்பு திடீர் விலகல்