×

தேர்தல் பிரசாரத்தில் இருந்து நடிகை குஷ்பு திடீர் விலகல்

சென்னை: மருத்துவர்கள் அறிவுரைப்படி தேர்தல் பிரச்சாரத்தில் இருந்து விலகுவதாக நடிகை குஷ்பு அறிவித்துள்ளார். நேற்று வடசென்னை தொகுதி பா.ஜ.க. வேட்பாளருக்காக நேற்று நடிகை குஷ்பு பிரச்சாரம் செய்தார். நேற்று மாலை பிரச்சாரம் செய்த குஷ்பு, திடீரென்று பிரச்சாரத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். சேலத்தில் பிரதமர் மோடி பங்கேற்ற பிரச்சார கூட்டத்தில் பங்கேற்று குஷ்பு பேசியிருந்தார். மருத்துவ காரணங்களுக்காக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட முடியாது என்று பா.ஜ.க. தலைவர் நட்டாவுக்கு நடிகை குஷ்பு கடிதம் எழுதியுள்ளார். 2019-ல் டெல்லியில் நடந்த விபத்தில் தனது முதுகு தண்டுவடத்தில் ஏற்பட்ட எலும்பு முறிவுக்கு, சிகிச்சை பெறுவதை சுட்டிக்காட்டி நட்டாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

The post தேர்தல் பிரசாரத்தில் இருந்து நடிகை குஷ்பு திடீர் விலகல் appeared first on Dinakaran.

Tags : Kushbu ,Chennai ,Kushpu ,North Chennai ,J. K. ,
× RELATED நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தில்...