×

கோயம்பேடு மார்க்கெட்டில் 8 பூக்கடைகளுக்கு சீல்

அண்ணாநகர்: கோயம்பேடு பூ மார்க்கெட்டில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்து வதாக வந்த புகாரின் பேரில், சிஎம்டிஏ முதன்மை நிர்வாக அலுவலர் சாந்தி மற்றும் அதிகாரிகள் நேற்று தீவிர சோதனை நடத்தினர். அப்போது, பூ மார்க்கெட்டில் பிளாஸ்டிக் பைகளை விற்பனை செய்த 8 கடைகள் கண்டறியப்பட்டு, அந்த கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். பின்னர், மேற்கண்ட கடை உரிமையாளர்களுக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

Tags : Coimbatore Market , Seal for 8 florists in Coimbatore Market
× RELATED கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி...