×

ஜெயங்கொண்டம் அருகே கணவனை கொன்று வீட்டு அருகே குழி தோண்டி புதைத்த மனைவி: 11 ஆண்டுகளுக்கு பின் தந்தை, அக்காளுடன் சிக்கினார்

ஜெயங்கொண்டம்: ஜெயங்கொண்டம் அருகே கணவனை கொன்று புதைத்த மனைவி, 11 ஆண்டுகளுக்கு பின் கைது செய்யப்பட்டார். அரியலூர் மாவட்டம் ஜமீன்குளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜன். இவருக்கு லட்சுமி (44) என்ற மகளும், குணசேகரன் (42) என்ற மகனும் உள்ளனர். திருமணமாகி இருவரும் தனித்தனியாக வசிக்கின்றனர். இந்நிலையில் கடந்த 2007ல் அதே பகுதியை சேர்ந்த செந்தாமரை (40) என்பவரது கொலை வழக்கில் குணசேகரன் மற்றும் அவரது உறவினர் சங்கர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் கடந்த 2011 ஜனவரி 21ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது.

அப்போது சங்கர் மட்டுமே ஆஜரானார். குணசேகரன் ஆஜராகவில்லை. குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுதொடர்பாக நேற்றுமுன்தினம் சகோதரி லட்சுமி, ஆண்டிமடம் போலீசில் புகார் செய்தார். அதில், எனது தம்பியை பல ஆண்டுகளாக காணவில்லை. அவரது மனைவியான ஜெயந்தியிடம் கேட்டபோது கேரளாவில் தங்கி இருப்பதாகவும், அவ்வப்போது போனில் தொடர்பு கொள்வதாகவும் கூறினார். குணசேகரனை கொலை செய்திருக்கலாம் என சிலர் பேசி வருகின்றனர். எனது தம்பியை கண்டுபிடித்து தர வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

இதுதொடர்பாக போலீசார் குணசேகரின் மனைவி ஜெயந்தி மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தியதில், குணசேகரன் அடிக்கடி மது அருந்திவிட்டு தகராறு செய்து வந்ததுள்ளார். 11 ஆண்டுகளுக்கு முன் தம்பதி இடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரத்தில் ஜெயந்தி தள்ளிவிட்டபோது தலையில் அடிபட்டு குணசேகரன் இறந்து விட்டார். அவரது உடலை வீட்டின் அருகே புதைத்தோடு, கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் புதைத்த இடத்திலிருந்து எலும்புகளை தோண்டி எடுத்ததும் விசாரணையில் தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து ஜெயந்தி (42), அவரது தந்தை மகாராஜன் (75), அக்காள் ஜோதி (40) ஆகியோரை நேற்று கைது செய்தனர்.

Tags : Jayankondam , Wife who killed her husband near Jayankondam and dug a pit near her house: 11 years later her father got stuck with her
× RELATED பெரம்பலூர் /அரியலூர் வீராக்கன்...