×

மசாலா போட்டு மொறுமொறு என வந்தது கேட்டது சிக்கன் பிரை வந்ததோ டவல் பிரை: ஆர்டர் கொடுத்த பெண் டென்ஷன்

பிலிப்பைன்ஸ்: பிலிப்பைன்சை சேர்ந்தவர் அலிக்யூ பெரஸ். இவர், அங்குள்ள ஜாலிபீ என்ற ஓட்டலில் சிக்கன் பிரைக்கு ஆர்டர் செய்தார். உணவு பொருட்களை வீடு தேடி வந்து வழங்கும், ‘கிராப்’ நிறுவனத்தின் மூலமாக இந்த ஆர்டரை கடந்த செவ்வாயன்று அவர் செய்தார். இதைத் தொடர்ந்து, அடுத்த சில மணி நேரங்களில் அவருடைய வீட்டிற்கு சிக்கன் பார்சல் வந்தது. கடும் பசியுடன் இருந்த அவர், சிக்கன் பிரை வந்ததும் ஒரு பிடி பிடித்து விட வேண்டும் எனற ஆவலில் இருந்தார். பார்சலை வாங்கி ஆர்வத்துடன் பிரித்த அவரும், அவருடைய மகனும் அதை பிய்த்து சாப்பிட முயன்றனர். ஆனால், பிய்க்க முடியவில்லை. அது மிகவும் கடினமாக இருந்தது. சிறிய துண்டுகளாக வெட்ட முயற்சித்த போதும் முடியவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அலிக்யூ, அந்த சிக்கனை சோதனை செய்தார். அப்போது, அது சிக்கனே அல்ல; டவல் என தெரிந்தது. சிக்கன் பிரைக்கு பதிலாக ஒரு டவலை மாசாலா போட்டு ஒட்டல் சமையல்காரர் வறுத்து கொடுத்துள்ளது கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து ஒட்டல் நிர்வாகத்தினரை அழைத்து, கன்னாபின்னா என்று சத்தம் போட்டார்.  இது பற்றி ஓட்டர் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சிக்கனுக்கு பதிலாக வறுத்த டவல் அனுப்பட்டது மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது. இதற்காக மன்னிப்பு கோருகிறோம். ஊழியர்களின் கவனக்குறைவால் இது நடந்துள்ளது. மேலும், 3 நாட்களுக்கு ஓட்டல் மூடப்படுகிறது. இனி வரும் நாட்களில் இதுபோன்ற தவறுகள் நடக்காத வகையில், உணவு தயாரிப்பு முறையில் கவனம் செலுத்தப்படும்,’ என கூறப்பட்டுள்ளது….

The post மசாலா போட்டு மொறுமொறு என வந்தது கேட்டது சிக்கன் பிரை வந்ததோ டவல் பிரை: ஆர்டர் கொடுத்த பெண் டென்ஷன் appeared first on Dinakaran.

Tags : Philippines ,Alicue Perez ,Jollibee ,
× RELATED பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணை வழங்கிய இந்தியா.!