குன்னூரில் ஹெலிகாப்டர் பைலட்களுக்கு பயிற்சி

குன்னூர் :  குன்னூரில் ஹெலிகாப்டர் பைலட்களுக்கு நேற்று பயிற்சி நடந்தது.நீலகிரி மாவட்டம் குன்னூர் நஞ்சப்பன்சத்திரம் கிராமத்தில் கடந்த டிசம்பர் 8ம் தேதி ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 14 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பிறகு ஹெலிகாப்டரின் பாகங்கள் எடுக்கும்போது ஒரு முறை மட்டும் இந்த பகுதியில் ஹெலிகாப்டர் இயக்கப்பட்டது.

அதன்பிறகு வெகு நாட்கள் ஹெலிகாப்டர் இயக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து ஹெலிகாப்டர் நேற்று குன்னூருக்கு வந்தது. 6 முறை வட்டம் அடித்து தரையில் இறக்கி மீண்டு்ம் வானில் ஏற்றப்பட்டது. நீண்ட நாட்களுக்கு பிறகு பைலட்களுக்கு ஹெலிகாப்டர் இயக்க பயற்சி அளிக்கப்பட்டதாக ராணுவ வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. குன்னூர் கால நிலை சீராக இருந்ததால் பயிற்சிக்கு ஏதுவாக இருந்ததாகவும் கூறப்பட்டது.

Related Stories: