×

அரை மணி நேரத்தில் 1,250 தோப்புக்கரணம்: அண்ணன், தம்பி சாதனை

மதுரை: மதுரையில் அரை மணி நேரத்தில் 1,250 முறை தோப்புக்கரணம் போட்டு அண்ணன், தம்பி  உலக சாதனையை எட்டும் முயற்சியை மேற்கொண்டனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலங்கத்தை சேர்ந்தவர் முத்துராமன். இவரது மனைவி தேவகி. முத்துராமன் அரசு போக்குவரத்து கழக ஓட்டுநராக உள்ளார். இவர்களின் மகன்கள் சுபாஷ்(14), மற்றும் பரத்(13). இருவரும் சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் பயின்று வருகின்றனர். இந்நிலையில் இன்று மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு வந்த சுபாஷ் மற்றும் பரத் ‘சூப்பர் பிரைன் யோகா’ எனப்படும் தோப்புக்கரணததை அரைமணி நேரத்தில் 1,250 முறை செய்து ஸ்பாட் லைட் உலக சாதனை முயற்சி மேற்கொண்டனர்.

இதில் சிறுவன் சுபாஷ் அரைமணி நேரத்தில் தொடர்ச்சியாக 1,250 முறை தோப்புக்கரணம் போட்டார். தொடர்ந்து பரத் நாற்காலி மீது ஏறி நின்று, அரைமணி நேரத்தில் 1,068 முறை தோப்புக்கரணம் போட்டார். சாதனை படைத்த சிறுவர்கள் சுபாஷ் மற்றும் பரத்துக்கு பாராட்டு தெரிவித்து, மதுரை மீனாட்சியம்மன் கோவில் இணை கமிஷனர் செல்லத்துரை பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினார்.


Tags : Anna ,Tampi , 1,250 gardening in half an hour: brother, brother record
× RELATED சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு