பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் தொடக்க, நிறைவு விழாக்களில் இந்திய தூதர் கலந்து கொள்ள மாட்டார் :ஒன்றிய அரசு

டெல்லி : பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் தொடக்க மற்றும் நிறைவு விழாக்களில் இந்திய தூதர் கலந்து கொள்ள மாட்டார் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. கால்வான் பகுதியில் இந்திய வீரர்களுடன் போரிட்ட சீன ராணுவ வீரர் கி ஃபாபவோ, ஒலிம்பிக் தீபத்தை ஏந்திச் சென்றதால் இந்தியா அதிருப்தி அடைந்துள்ளது. மேலும் தொடக்க விழாவின் நேரலையை ஒன்றிய அரசின் உத்தரவுப்படி ரத்து செய்வதாக தூர்தஷன் அறிவித்துள்ளது.

Related Stories: