×

திருமழிசை பேரூராட்சியில் நேற்று திமுக, அதிமுக, பாஜக உட்பட 55 பேர் வேட்புமனு தாக்கல்

திருவள்ளூர்: திமுக சார்பில் போட்டியிட அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கும், முத்தமிழ் அறிஞர் கலைஞரின் திருவுருப் படத்திற்கும்  பூந்தமல்லி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி  தலைமையில் ஒன்றிய செயலாளரும், ஒன்றியக் குழு தலைவருமான பூவை எம்.ஜெயக்குமார், ஒன்றிய குழு துணை  தலைவர் பரமேஸ்வரி கந்தன் ஆகியோர் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பிறகு பேரூராட்சி அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் கி.ரவியிடம்  திமுக வேட்பாளர்களான 14 வது வார்டு - பேரூர் செயலாளர் தி.வே.முனுசாமி, 8 வது வார்டு - மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் ஜெ.மகாதேவன், 1 வது வார்டு - என்.தேவி, 3 வது வார்டு - வி.விஜயலட்சுமி, 4 வது வார்டு - உ.வடிவேலு, 5 வது வார்டு - ஏ.கஸ்தூரி, 6 வது வார்டு - ஆர்.கருணாநிதி, 7 வது வார்டு சீனிவாசன், 9 வது வார்டு - மு.குமார், 10 வது வார்டு - ஜீவா, 11வது வார்டு -  எஸ்.ரேணுகா, 12வது வார்டு - ச.அனிதா, 13 வது வார்டு - பி.பூவரசி ஆகியோரும், 2 வது வார்டு - மதிமுக வேட்பாளர் மஞ்சுளா, 15 வது வார்டு - காங்கிரஸ் வேட்பாளர் வீரமணி ஆகியோரும் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதேபோல் பாஜக, அதிமுக வேட்பாளர்களும் மற்றும் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் புரட்சிபாரதம் கட்சி வேட்பாளர்கள் 13 வது வார்டு வே.ஜெயசுதா வேணுகோபால், 5 வது வார்டு நதியா முருகன், 12 வது வார்டு சித்ரா ஆனந்தன் ஆகியோரும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

அதிமுக சார்பில் போட்டியிடும் கணவன், மனைவி : செங்குன்றம் நாரவாரிக்குப்பம் பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டு உறுப்பினருக்கான தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் செய்ய  இன்று கடைசி நாள் ஆகும். இந்நிலையில், நேற்று செங்குன்றம் நாரவாரிக்குப்பம் பேரூராட்சி அலுவலகத்தில் அதிமுக சார்பில் 10 பேரும், தேமுதிக சார்பில் ஒருவரும், நாம் தமிழர் கட்சி சார்பில் ஏழு பேரும், பிஎஸ்பி கட்சி சார்பில் ஒருவரும், பாஜ சார்பில் ஐந்து பேரும், சுயேட்சைகள் 7 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். நேற்று மட்டும் 31 பேர் மனுத் தாக்கல் செய்துள்ளனர். இன்று திமுக, அதிமுக மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர்,  சுயேட்சைகள் வேட்புமனுத் தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் 18 அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் 2வது வார்டுக்கு பத்மாவதிமுனுசாமி, 3வது வார்டுக்கு முனுசாமி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.இவர்கள் கணவன் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. முனுசாமி அதிமுகவில் முக்கிய நிர்வாகியாக உள்ளார்.

Tags : DMK ,AIADMK ,BJP ,Thirumalisai , 55 candidates including DMK, AIADMK and BJP filed their nomination papers in Thirumalisai municipality yesterday
× RELATED பாஜ ஆட்சியில் பத்திரிகை சுதந்திரம்...