×

தீவிரவாதிகளின் தீவிர ஆதரவாளர் அமெரிக்காவில் பாக். தூதராக மசூத் கானை நியமிக்க எதிர்ப்பு: அதிபர் பைடனுக்கு இந்தியர்கள் வேண்டுகோள்

வாஷிங்டன்: தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக இருப்பதால், அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதராக மசூத் கானை நியமிக்க கூடாது என்று இந்திய வம்சாவளி அமைப்பினர் அதிபர் பைடனுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதராக மசூத் கானை நியமனம் செய்யக் கூடாது என்று பவுண்டேஷன் பார் இந்தியா, இண்டியன் டயஸ்போரா ஸ்டடிஸ் ஆகிய இந்திய வம்சாவளி அமைப்பினர் அதிபர் பைடனை கேட்டுக் கொண்டுள்ளனர்.

இது குறித்து இந்த அமைப்பினர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் தலைவராக மசூத் கான் பணியாற்றிய போது, அங்கு வெளியான பத்திரிகைகள், அரசு அறிக்கைகள் ஜூனைத் ஷெக்ராய், தாரிக் அகமது ஹிஸ்புல் போன்ற தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக அவற்றின் புகழ் பாடின. அமெரிக்காவில் சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ள ஹிஸ்புல் முஜாகிதீன், ஹர்கத்-உல்-முஜாகிதீன், ஜமாத்-இ-இஸ்லாமி தீவிரவாத அமைப்புகளுக்கு அவர் அளிக்கும் ஆதரவு அமெரிக்கா மட்டுமல்ல, உலக நாடுகளின் அமைதிக்கு தீங்கு விளைவிக்கும்.

அவருக்கு தூதரக பதவி அளிப்பதன் மூலம் அமெரிக்க அரசு அமைப்புகளுக்குள் தீவிரவாதிகள் ஊடுருவக் கூடும். தீவிரவாதிகளுக்கு ஆதரவு அளிப்பதில் உறுதியான நிலைப்பாட்டை கொண்டிருக்கும் மசூத் கான் தூதராக நியமிக்கப்பட்டால்,தேவையற்ற தர்மசங்கடம் உருவாகக் கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

Tags : Bach ,United States ,Masood Khan ,President ,Biden , Bach in the United States is an ardent supporter of extremists. Opposition to appointing Masood Khan as ambassador: Indians appeal to President Biden
× RELATED அமெரிக்காவில் ரோபோ நாய் அறிமுகம்…!!