×

மீனவர்கள் தாக்கப்படும் பிரச்னை: இலங்கையுடன் விரைவில் பேச்சு

புதுடெல்லி: மதிமுக தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ, ‘தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதை ஒன்றிய அரசு கணக்கெடுத்து உள்ளதா? தமிழக மீனவர்கள் தாக்கப்படும் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண, இருநாடுகளின் கூட்டு கூட்டத்தை கூட்ட ஒன்றிய அரசு அழைப்பு விடுத்துள்ளாதா?’ என எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பினார்.  

அதற்கு, வெளியுறவுத் துறை இணை அமைச்சர் முரளீதரன் அளித்துள்ள பதிலில், ‘இலங்கை கடற்படையால் இந்திய மீனவர்கள் தாக்கப்படும் தகவல் கிடைத்ததும், ஒன்றிய அரசு தூதரகம் மூலமாக இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறது.  கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பரில் நடைபெற்ற உச்சி மாநாட்டில் இந்திய பிரதமர், இலங்கை பிரதமரிடம் இந்திய மீனவர்கள் பிரச்னை குறித்து அதிகம் பேசியுள்ளார். 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கைக்கு பயணம் செய்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் அந்த நாட்டு மீன்வளத் துறை அமைச்சரை சந்தித்து, மீனவர்கள் பிரச்னை பற்றி ஆலோசித்தார்.

மேலும், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்திய காரணத்தால், கடந்த ஜனவரி மாதம் 25ம் தேதி 56 மீனவர்களை இலங்கை அரசு விடுவித்தது. மீன்வளம், மீனவர்கள் பிரச்னைகள் குறித்து பேசுவதற்காக, இருநாடுகளின் கூட்டு கூட்டத்தை விரைவில் நடத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது,’ என தெரிவித்துள்ளார்.

Tags : Prashna ,Sri ,Lanka , Issue of fishermen being attacked: Talks with Sri Lanka soon
× RELATED நாகையில் இருந்து இலங்கைக்கு மீண்டும்...