×

போலி டிவிட்டர் பக்கம் ஷாலினி விளக்கம்

சென்னை: தனது பெயரில் போலியான டிவிட்டர் பக்கம் தொடங்கப்பட்டுள்ளதாக ஷாலினி அஜித் கூறியுள்ளார். டிவிட்டரில் இணைந்த, இணையாத பல நடிகர் நடிகைகளின் பெயரில் போலி பக்கம் இயங்குவது அதிகரித்து விட்டது. சில மர்ம நபர்கள் இதுபோல் செயல்படுகின்றனர். சில நடிகர்கள் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் இந்த போலி கணக்கு தொடங்குவது தொடர்கிறது. நடிகர் அஜித்தின் மனைவியும் நடிகையுமான ஷாலினி, எந்த சமூக வலைத்தளத்திலும் இயங்கவில்லை. இந்நிலையில் மிஸ்ஸஸ் ஷாலினி அஜித்குமார் என்ற பெயரில் டிவிட்டர் பக்கம் இயங்கி வருவதாகவும் இது போலியானது என்றும் ஷாலினி கூறியுள்ளார். இந்த பக்கத்தை தவிர்க்கும்படி ரசிகர்களை ஷாலினி கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags : Twitter ,Shalini , Fake Twitter page Shalini description
× RELATED சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ...