×

தமிழ்நாட்டில் நிலுவையில் உள்ள 9 நெடுஞ்சாலை திட்டங்கள் இந்தாண்டு முடிவடையும்: ஒன்றிய அமைச்சர் நிதின்கட்கரி தகவல்

டெல்லி: தமிழ்நாட்டில் நிலுவையில் உள்ள 9 நெடுஞ்சாலை திட்டங்கள் இந்தாண்டு முடிவடையும் என்று ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. திமுக மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமார் எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் நிதின்கட்கரி பதிலுரை அளித்துள்ளார். 550 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 42 கிலோ மீட்டர் நீளமுள்ள வில்லுக்குறி - கன்னியாகுமரி சாலை திட்டம், ரூ.300 கோடி மதிப்பீட்டில் 33 கிலோ மீட்டருக்கு சென்னை -  தடா இடையிலான ஆறு வழி சாலை திட்டம், ரூ.45 கோடி மதிப்பீட்டில் 30 கிலோ மீட்டருக்கு செட்டிகுளம்-நத்தம் இடையிலான நான்கு வழி சாலை திட்டம் போன்றவை நிலுவையில் உள்ள நெடுஞ்சாலை திட்டங்களாகும்.

Tags : Tamil Nadu ,Union Minister ,Nitin Gadkari , Tamil Nadu, pending, highway project, Nitin Gadkari
× RELATED தமிழ்நாட்டில் கருவுற்ற பெண்கள்...