×

ஒரத்தநாடு நகரில் பாதாள சாக்கடை திட்டத்தால் சுத்திகரிப்பு தண்ணீரை பாசனத்துக்கு பயன்படுத்த கலந்தாய்வு செய்து நடைமுறை படுத்த வேண்டும்-நடவடிக்கை எடுக்க கலெக்டருக்கு கோரிக்கை

ஒரத்தநாடு : ஒரத்தநாடு நகரில் பாதாள சாக்கடை திட்டத்தால் சாக்கடைத் தண்ணீரை சுத்திகரிப்பு செய்த தண்ணீரை பாசனத்துக்கு பயன்படுத்த விஞ்ஞானிகளின் பரிந்துரையின்படி கலந்தாய்வு செய்து நடைமுறைப்படுத்த மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தற்பொழுது ஒரத்தநாடு நகர மக்களுக்காக இந்தத் இத்திட்டத்தின் மூலம் தொற்று நோயிலிருந்து பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அதே நேரத்தில் பேரூராட்சி நிர்வாகம் இந்த பாதாள சாக்கடை திட்டத்தில் சாக்கடை தண்ணீரை சுத்திகரித்து அரசு கால்நடை கல்லூரி புல் வளர்க்கும் திட்டத்திற்கு அந்த தண்ணீரை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் மழை காலங்களில் அந்த தண்ணீர் கால்நடை கல்லூரி நிர்வாகத்தால் அதிக அளவு பயன்படுத்த முடிவதில்லை.

இதனால் ஒரத்தநாடு நகரில் மழை காலங்களில் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த முடியாமல் பேரூராட்சி நிர்வாகம் தடுமாறி வரும் நிலை உள்ளது. ஒரத்தநாடு நகரில் உள்ள பாதாள சாக்கடை தண்ணீரை சுத்திகரிப்பு நிலையத்திற்கு அருகில் உள்ள பகுதிகளில் விவசாயத்திற்கு பயன்படுத்த மாவட்ட கலெக்டர், வேளாண் அதிகாரிகள் மூலமாக அழைப்பு விடுத்து, விஞ்ஞானிகளின் பரிந்துரைப்படி இந்த தண்ணீரை உபயோகப்படுத்தி லாபம் தரும் பயிர்களுக்கு பயிரிட முடியும் என்பதை கலந்தாய்வு செய்து, மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாதாள சாக்கடைதிட்டத்தில் சேகரிக்கப்பட்ட தண்ணீரை மண்வளம் பாதிக்கப்படாமல் லாபம் தரும் பயிர்களை சாகுபடி செய்வதற்கு என்னென்ன வழிகள் இருக்கிறது என்பதை வேளாண் விஞ்ஞானிகளும் இந்திய அறிவியல் ஆய்வு தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர்களும் வழிகாட்ட தஞ்சை கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags : Orathanadu , Orathanadu: Scientists are using the treated water from the underground sewerage project in Orathanadu for irrigation.
× RELATED ஒரத்தநாட்டில் தீ தொண்டு நாள், வார...