×
Saravana Stores

வேலூரின் நம்பர் 1 சூரியன் எப்எம் 93.9 சார்பில் கொரோனா தடுக்க ‘எஸ்எம்எஸ்’ விழிப்புணர்வு வாகனம்-சோப்பு, மாஸ்க், சோசியல் டிசஸ்டன்ஸ்சுக்கு வலியுறுத்தல்

வேலூர் : வேலூரின் நம்பர் 1 சூரியன் எப்எம் 93.9 சார்பில் பொதுமக்கள் இடையே கொரோனா விழிப்புணர்வு வாகனம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மகிழ்ச்சிக்கு உத்தரவாதம் அளிக்கும் வேலூரின் சூரியன் எப்.எம் 93.9 நேயர்களுக்கு கலகலப்பான நிகழ்ச்சிகளோடு, அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய தகவல்களையும் வழங்கி வருகிறது. இன்றைய கொரோனா காலக்கட்டத்தில் மக்களுக்காகவும் அவர்களது வாழ்வாதாரத்திற்காகவும் பல தளர்வுகளை அரசு வழங்கி வருகிறது. இந்த நிலையில் கொரோனாவின் பிடியில் இருந்து மக்கள் தங்களை தற்காத்து கொள்ள எஸ்எம்எஸ் அதாவது, சோப்பு, மாஸ்க், சமூக இடைவெளியை (சோஷியல் டிஸ்டன்ஸ்) கடைபிடிக்க வேண்டும் என்று சூரியன் எப்எம் நிகழ்ச்சிகளிலும், வேலூரின் முக்கிய பகுதிகளில் அறிவிப்புகளை வழங்கி வருகிறது.

இதையொட்டி நேற்று காலை 10 மணி அளவில் இரண்டு விழிப்புணர்வு வாகனங்கள் தோட்டப்பாளையம் சூரியன் எப்எம் அலுவலகத்தில் இருந்து புறப்பட்டது. தொடர்ந்து சைதாபேட்டை, காகிதப்பட்டறை, காந்திநகர், காட்பாடி, காங்கேயநல்லூர் போன்ற பகுதிகளுக்கு சென்று மக்களிடையே கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தின.சூரியன் எப்எம் (எஸ்எம்எஸ்) முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் மற்றும் கை கால்களை சோப்பு போட்டு சுத்தம் செய்தல் ஆகியவையே உங்களை கொரோனாவில் இருந்து பாதுகாக்கும்.

இந்த கருத்துக்களை வலியுறுத்தி உங்கள் பகுதிகளுக்கும் சூரியன் எப்எம்மின் கொரோனா விழிப்புணர்வு வாகனம் வருகை தர உள்ளது. இந்த கொரோனா விழிப்புணர்வை மக்கள் கடைபிடிப்பதோடு, குடும்பத்தினர் நண்பர்களையும் கடைபிடிக்க சொல்வது சிறந்தது. சூரியன் எப்எம் 93.9 உடன் பூர்விகா மொபைல்ஸ், ஸ்ரீ நாராயணி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் இணைந்து வரும் 11ம் தேதி வரை இந்த விழிப்புணர்வை மேற்கொள்ள உள்ளது.

Tags : Vellore ,Corona , Vellore: Corona Awareness Vehicle is being carried out among the public on behalf of Vellore's No. 1 Sun FM 93.9.
× RELATED காட்பாடி அருகே பயணிகள் ரயிலின்...