அஜித்துடன் மோகன்லால் நடிக்கிறார்?

சென்னை: அஜித்தின் அடுத்த படத்தில் மோகன்லால் நடிக்கிறார் என தகவல் பரவியுள்ளது. வலிமை படத்துக்கு பிறகு மீண்டும் அஜித் நடிக்கும் படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். இந்த படத்தையும் வினோத் இயக்குகிறார். இது அஜித்தின் 61வது படமாகும். இதில் ஹீரோயினாக தபு நடிப்பார் என கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் மோகன்லால் நடிக்க இருப்பதாக தகவல் பரவியுள்ளது. அஜித், மோகன்லால் இதுவரை சேர்ந்து நடித்ததில்லை. இதனால் இவர்களின் காம்பினேஷனை ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். சில நாட்களுக்கு முன் கேரளாவில் படப்பிடிப்பில் இருந்த மோகன்லாலை அஜித் சந்தித்தார். அப்போது இந்த படத்தில் அவரை நடிக்க வைப்பது குறித்து பேசியதாக சொல்லப்படுகிறது. இதனால் இருவரும் சேர்ந்து நடிப்பது சில நாட்களில் தெரிந்துவிடும் என சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.

Related Stories: