×

முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரளாவிற்கு துணை போகும் மத்திய நீர்வள ஆணையம்:ஓபிஎஸ் காட்டம்!!

சென்னை : முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பினை மறு ஆய்வு செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மத்திய நீர்வள ஆணையத்தினால் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையினை எதிர்த்து மனு தாக்கல் செய்ய ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், முல்லைப் பெரியாறு அணைக்கு செல்ல வேண்டுமென்றால் படகு மூலமாக தான் செல்ல வேண்டும்.  பேபி அணையை பலப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றால் ஐந்து கிலோ மீட்டர் நீளமுள்ள வல்லக்கடவு முல்லைப் பெரியாறு அணுகு  சாலையை சரி செய்த பின் அந்த சாலை வழியாக கட்டுமானத்திற்கு தேவையான பொருட்கள் எடுத்துச் செல்லப்பட வேண்டும். உச்ச நீதிமன்ற தீர்ப்பினை முற்றிலும் அவமதிக்கும் வகையில் கேரள அரசு ,  அணுகு சாலையை சரி செய்யவோ அல்லது அங்குள்ள மரங்களை வெட்டவும் முடியாத சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளது. இது குறித்து கண்காணிப்பு குழு முன்பு பலமுறை தமிழ்நாடு அரசு சார்பில் எடுத்துக் கூறப்பட்டு இருக்கிறது என்றால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

உண்மை நிலை இவ்வாறிருக்க அணையின் ஒட்டுமொத்த பாதுகாப்பு மற்றும் அதனுடைய கட்டமைப்புகள் திருப்திகரமாக இருப்பதாக  தெரிவித்துவிட்டு,  அணையின் பாதுகாப்பு இதை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய நீர்வள ஆணையம் அறிக்கை தாக்கல் செய்திருப்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.  இது போன்ற சூழ்நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் கேரள அரசின் நடவடிக்கையை சுட்டிக்காட்டி உச்சநீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்த, தேவையான நடவடிக்கை எடுக்கும் வகையில், மனு தாக்கல் செய்யாமல் அதை முற்றிலுமாக புறந்தள்ளிவிட்டு, முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று மத்திய நீர்வள ஆணையம் மனு தாக்கல் செய்திருப்பது நியாயமற்றது.

மத்திய நீர்வள ஆணையத்தின் அறிக்கையை உச்ச நீதிமன்றத் தீர்ப்பினை முற்றிலும் அவமதிக்கும் வகையில் செயல்பட்டு கொண்டிருக்கும், கேரளாவிற்கு துணை போவது போல் அமைந்துள்ளது மத்திய நீர்வள ஆணையத்தின், மனுத்தாக்கலை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய வேண்டிய கடமையும் பொறுப்பும் தமிழ்நாடு அரசுக்கு உண்டு

எனவே தமிழக முதல்வர் இதில் உடனடியாக தலையிட்டு மத்திய நீர்வள ஆணையத்தின் அறிக்கை கடும் எதிர்ப்பினைத் தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும், பேபி அணை மற்றும் அணை பகுதிகளில் வலுப்படுத்தும் வகையில், மரங்களை வெட்டவும், அணுகு சாலையை சரி செய்யவும் அனுமதி வழங்குமாறு, கேரள அரசுக்கு உத்தரவிடக் கோரி மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும், தமிழ்நாடு அரசின் சார்பில் திறமையான வழக்கறிஞர்களை மூலம் வலுவான வாதங்களை உச்சநீதிமன்றத்தில் எடுத்துரைக்க வேண்டும் என்றும் ,இது மட்டுமல்லாமல் இதை  பிரதமர் மற்றும் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் ஆகியோரின் கவனத்திற்கு எடுத்துச்சென்று மத்திய நீர்வள ஆணையம் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை மறு ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags : Central Water Commission ,Kerala ,Mullah Periyari ,Dam , ஓபிஎஸ் ,ல்லை பெரியாறு அணை
× RELATED பாலியல் வழக்கில் கேரள நடிகர் சித்திக்கிற்கு ஜாமின் மறுப்பு..!!