×

உள்ளாட்சி தேர்தல் தமாகா வேட்பாளர்கள் அறிவிப்பு எப்போது?

சென்னை: அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசித்து தமாகா வேட்பாளர்கள் அறிவிக்கப்படும் என தமாகா அறிவித்துள்ளது. இதுகுறித்து தமாகா வெளியிட்ட அறிக்கை: தமாகாவின் உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் குழு உறுப்பினர்கள், நேற்று முன்தினம் மாலை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்தனர். அப்போது, கட்சி தலைவர் ஜி.கே.வாசன் கொடுத்த உள்ளாட்சி தேர்தல் சம்பந்தமான கடிதத்தை கொடுத்திருக்கிறார்கள். அதனடிப்படையில் தமாகா மாவட்ட தலைவர்கள் தலைமையிலான தேர்தல் குழு அதிமுகவின் மாவட்ட செயலாளர்களுடன் கலந்து பேசி தமாகாவின் வேட்பாளர்கள் முடிவு செய்யப்படுவார்கள்.

Tags : Tamaka , When will the local election Tamaga candidates be announced?
× RELATED தேர்தல் விதிமீறலில் ஈடுபட்டதாக ஈரோடு...