×

'இது நாகாலாந்து அல்ல... தமிழ்நாடு...' - ஆளுநர் ஆர்,என்.ரவி குறித்து திமுகவின் நாளேடான முரசொலி கடும் விமர்சனம்

சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்,என்.ரவி தனது அதிகார எல்லையை மீறி செயல்படுகிறாரா என்று என்ன தோன்றுவதாக திமுகவின் அதிகார பூர்வ நாளேடான முரசொலி காட்டமாக விமர்சித்துள்ளது. இது நாகலாந்து அல்ல.. தமிழ்நாடு என்பதை ஆளுநர் உணர்ந்திட வேண்டும் என முரசொலி கூறியுள்ளது. திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் கொக்கென்று நினைத்தாரா; தமிழக ஆளுநர் ரவி என்ற தலைப்பில் கட்டுரை வெளியாகியுள்ளது. அதில் ஆர். என்.ரவி நாகலாந்து ஆளுநராக இருந்த போது அவரது அத்துமீறல்கள் அரசு மீது மட்டுமின்றி ஊடகவியாளர்கள் மீதும் இருந்ததாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ஆளுநராக பொறுப்பேற்றுள்ள அவர், சில நேரங்களில் தனது அதிகார எல்லையை மீறி செயல்படுகிறாரோ?.. என்று என்ன தோன்றுவதாக முரசொலி விமர்சித்துள்ளது. காவல்துறை அதிகாரியாக இருந்து ஓய்வுக்கு பின் அதிகாரியான ரவியின் மிரட்டல் அரசியலில் எடுபடாது என்பதே அவர் உணர்ந்திட வேண்டும் என கட்டுரையில் கூறப்பட்டுள்ளது. ஏறத்தாழ ஏழரை மக்களின் பிரதிநிதிகள் அடங்கிய தமிழ்நாடு சட்டமன்றம் ஒருமனதாக நிறைவேற்றிய தீர்மானத்தின் மீது எந்த கருத்தும் தெரிவிக்காமல் சட்டத்தின் சந்து பொந்துகளில் பதுங்கி கொண்டிருப்பதாக முரசொலி விமர்சித்துள்ளது.

நீட் தேர்வுக்கு ஆதரவான கருத்தை ஆர். என்.ரவி தெரிவித்தது என்ன வகையில் நியாயம் என கேள்வி எழுப்பியுள்ளது. மற்ற இந்திய மாநிலங்கள் போல் அல்லாமல் தமிழ்நாடு அரசியலில் குடம் போட்ட மண் என்பதை உணர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருமொழி கொள்கை, நீட் வேண்டாம் என்ற விவகாரங்களில் ஒட்டுமொத்த தமிழ்நாடும் ஒன்றிணைந்து நிற்கும் போது ஆளுநர் ரவி அதை உணர்ந்து ஒட்டுமொத்த தமிழகத்தின் உரிமை குரலுக்கு அங்கீகாரம் தர முயற்சி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆளுநர் ரவி எந்த கருத்தை தெரிவிக்கும் முன்பும் தமிழ்நாட்டின் வரலாற்றை தெரிந்துகொண்டு கூறுவது அவரது பதவிக்கு பெருமை. என்றும் பெரியண்ணன் மனப்பான்மையோடு செயல்பட, இது நாகலாந்து அல்ல தமிழ்நாடு என்பதை ஆளுநர் உணர வேண்டும் எனவும் முரசொலி கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Tags : Nagaland ,Tamil Nadu ,Governor R ,N. Thimuva ,Murasoli ,Ravi , 'This is not Nagaland ... Tamil Nadu ...' - DMK's daily Murasoli harsh criticism of Tamil Nadu Governor RN Ravi
× RELATED சுதந்திரப் போராட்ட வீரர்களின்...