உத்திரமேரூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் கட்டிடத்துக்கு பூமி பூஜை: க.சுந்தர் எம்எல்ஏ துவங்கி வைத்தார்

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த மானாம்பதி கிராமத்தில் செயல்படும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.48 லட்சத்தில் புற நோயாளிகளுக்கான கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கு பூமி பூஜை நடந்தது. ஒன்றியக்குழு பெருந்தலைவர் ஹேமலதா ஞானசேகரன் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு உறுப்பினர் சுகுணா சுந்தர்ராஜன், ஒன்றிய செயலாளர்கள் ஞானசேகரன் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் ராதா நடேசன் வரவேற்றார். க.சுந்தர் எம்எல்ஏ கலந்துகொண்டு பூமி பூஜையை துவக்கி வைத்தார். இதில், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சோழனூர் ஏழுமலை, மாவட்ட குழு உறுப்பினர் பத்மாபாபு, பொறியாளர் அணி துணை அமைப்பாளர் சசிகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: