திருமயம் கோட்டை பைரவர் கோயிலில் பூசணிக்காயில் தீபம் ஏற்றி பக்தர்கள் வழிபாடு

திருமயம்: திருமயம் கோட்டை பைரவர் கோயிலில் நடைபெற்ற தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாட்டில் பக்தர்கள் பூசணிக்காயில் தீபம் ஏற்றி பக்தர்கள் வழிபட்டனர். புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் இந்து அறநிலைய துறைக்கு சொந்தமான கோட்டை பைரவர் கோயில் உள்ளது. இதுமதுரை, காரைக்குடி செல்லும் முக்கிய சாலையில் உள்ளதால் சாதாரன நாட்களில் இங்கு 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து வழிபாடு நடத்துவது வழக்கம். இந்நிலையில் நேற்று தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு கோட்டை பைரவர் கோயிலில் பூசணிக்காய், மிளகு முடிச்சு தீப வழிபாடு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதற்காக 27 பூசணிக்காயை இரண்டாக வெட்டி அதில் எண்ணெய், நெய் ஊற்றி விளக்கேற்றினர். இதனை தொடர்ந்து சிறப்பு வழிபாடு, ஆராதனை நடைபெற்றது. இதனிடையே கோயிலுக்கு வந்த பக்தர்களும் பூசணிக்காயில் தீபம் ஏற்றி வழிபட்டனர். இந்த வழிபாட்டில் கலந்து கொள்ள சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் வந்திருந்தனர்.

Related Stories: