×

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் எஸ்சி,எஸ்.டிக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்காததை எதிர்த்து வழக்கு: தமிழக அரசு, மாநில தேர்தல் ஆணையத்திற்கு ஐகோர்ட் நோட்டீஸ்

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக செயலாளர் ஏ.சி.சத்தியமூர்த்தி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், மக்கள் தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். அரசியல் சாசன விதிகளின்படி பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்காமல் இட ஒதுக்கீடு வழங்கப்படாததால் இந்த அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும். அரசாணையை ரத்து செய்து புதிய அரசாணையை வெளியிட உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் விஜயேந்திரன் ஆஜராகி, பழங்குடியின மக்களுக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்காமல் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கும், மாநில தேர்தல் ஆணையத்துக்கும் உத்தரவிட்டு விசாரணையை பிப்ரவரி 3ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Tags : Government of Tamil Nadu ,State Election Commission , Case against SC, ST for not giving proper reservation in urban local body elections: Tamil Nadu government, iCourt notice to State Election Commission
× RELATED அரசியல் சட்டப்படி அனைத்துக்...