ஆசிரியர்கள் பணியிட மாறுதல் தொடர்பான திருத்தங்களை இன்று பதிவேற்ற வேண்டும்: பள்ளி கல்வி ஆணையர் அறிவிப்பு

சென்னை: தமிழக பள்ளிக் கல்வி ஆணையர் நந்தகுமார் வெளியிட்டுள்ள அறிவிப்பு: பள்ளிக் கல்வி அரசாணை 176ல் தெரிவிக்கப்படி, 2021-2022கல்வி ஆண்டுக்கு அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கவுன்சலிங் நெறிமுறைகள் சார்பாக ஆணை வெளியிடப்பட்டு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களை தவிர்த்து பிற அனைத்து வகையான ஆசிரியர்கள் மாறுதல் கோரி விண்ணப்பித்தவர்களில் தற்காலிக முன்னுரிமைப் பட்டியலில் முறைகேடுகள் ஏதும் இருந்தால், அது குறித்து மேல் முறையீடு செய்ய ஜனவரி 21ம் தேதி மாலைவரை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் காலிப்பணியிட விவரங்களும் 23ம் தேதி இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த காலிப் பணியிடங்கள் குறித்து சேர்க்கை, நீக்கம், திருத்தம் ஏதாவது இருந்தால் அவற்றை 25ம் தேதிக்குள் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இது தவிர, கணவன் மனைவி முன்னுரிமையில் மாறுதல் கோரி விண்ணப்பித்தவர்கள் எந்த மாவட்டத்தில் பணியாற்றுகிறார்களோ அந்த மாவட்டத்தில் உள்ள பள்ளிகளைத்  தான் தெரிவு செய்ய வேண்டும். கணவனோ அல்லது மனைவியோ பணிபுரியாத வேறு மாவட்டத்தை தெரிவு செய்யக் கூடாது.

Related Stories: