×

தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய தலைவராக பூச்சிமுருகன் நியமனம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:‘அனைவருக்கும் வீட்டுவசதி’ என்ற குறிக்கோளை எய்தும் வகையில் உருவாக்கப்பட்டது தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம்.  தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் கட்டப்பட்ட குடியிருப்புகளில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட வீடுகள் சமூகத்தில் பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினர்களுக்காக பல்வேறு திட்டங்கள் வாயிலாக, லட்சக்கணக்கான மக்கள் வீட்டு உரிமையாளர்களாக வேண்டும் என்ற அவர்களுடைய கனவை நனவாக்கிய பெருமைக்குரியது.

அத்தகைய சிறப்புமிக்க தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் தலைவராக பூச்சி எஸ்.முருகன் நியமித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. பூச்சி எஸ்.முருகன் ஏற்கனவே திரைப்பட தணிக்கை குழு உறுப்பினர், விளையாட்டு மேம்பாட்டு குழு உறுப்பினர், தென்னிந்திய நடிகர் சங்க அறக்கட்டளை குழு உறுப்பினர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை திறம்பட வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.



Tags : Poochimurugan ,Tamil Nadu Housing Board ,Chief Minister ,MK Stalin , Tamil Nadu Housing Board Appointment of Poochimurugan as Chairman: Order of Chief Minister MK Stalin
× RELATED முதல்வராக சந்திரபாபு பதவியேற்க உள்ள...