சுவிட்சர்லாந்தில் சமந்தா பனிச்சறுக்கு விளையாட்டு

சென்னை: தமிழில் காத்துவாக்குல ரெண்டு காதல், யசோதா, தெலுங்கில் சாகுந்தலம், இந்தியில் வெப்தொடர் ஆகியவற்றில் நடித்து வரும் சமந்தா, தனது கணவரும், நடிகருமான நாக சைதன்யாவை விவாகரத்து செய்ததாக சமூக வலைத்தளத்தில் அறிவித்தார். இதையடுத்து சுதந்திர பறவையாக மாறிய அவர், தனது நெருங்கிய தோழிகளுடன் இணைந்து துபாய் மற்றும் ரிஷிகேஷ் சென்றார். பிறகு கோவா சென்று ஆங்கில புத்தாண்டு கொண்டாடினார்.

இதையடுத்து திருப்பதி கோயிலுக்கு சென்று வந்தார். இந்நிலையில், தனது விடுமுறையை கொண்டாட சுவிட்சர்லாந்து சென்றுள்ள சமந்தா, அங்குள்ள மலையில் பனிச்சறுக்கு விளையாட்டில் பங்கேற்ற வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதற்கு கேப்ஷனாக, ‘உங்கள் ஈகோவை வீட்டிலேயே விட்டுவிடுங்கள் என்று சொன்னார்கள். உண்மையான வார்த்தைகள் எதுவும் பேசப்படவில்லை’ என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories: