×

அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் சென்னை மாநகர் சாலைகளில் மேற்கொள்ளப்படும் பணிகளில் உள்ள இடர்பாடுகளை நீக்குவதற்கான கலந்தாய்வு கூட்டம்

சென்னை: பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில், இன்று (22.1.2022) தலைமைச் செயலகத்தில், சென்னை மாநகர் சாலைகளில் மேற்கொள்ளப்படும் பணிகளில் உள்ள இடர்பாடுகளை நீக்குவதற்கான, பிற துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டது. பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் தலைமையில், இன்று (22.1.2022) காலை தலைமைச் செயலகத்தில், நெடுஞ்சாலைத்துறையின் மூலம், சென்னை மாநகரின் சாலைகளை மேம்படுத்தும் பணிகளை செயல்படுத்தும்போது உள்ள இடர்பாடுகளை களைவதற்கான, பிற துறைகளான எல்காட், சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம், தெற்கு இரயில்வே, மின்வாரியம் மற்றும் நீர்வளத்துறை ஆகிய துறைகளை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைப் பெற்றது.

நெடுஞ்சாலைத்துறை கூட்டிய இவ்வாய்வு கூட்டத்தில், இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர்பி.கே.சேகர் பாபு, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் மேலும், எல்காட், சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம், தெற்கு இரயில்வே, மின்வாரியம், நீர்வளத்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறைகளை சேர்ந்த உயர் அதிகாரிகள் கலந்துக் கொண்டனர்.

Tags : Minister ,A. V.V ,Chennai Municipal ,Velu , Minister EV Velu, Chennai Bailiff Road, Work, Consultative Meeting
× RELATED சென்னையில் சிறுமியை கடித்த 2 நாய்களை...