×

களக்காடு புலிகள் காப்பகத்தில் முதல் முறையாக செல்போன் ஆப் மூலம் வனவிலங்குகள் கணக்கெடுப்பு-ஊழியர்களுக்கு சிறப்பு பயிற்சி

களக்காடு : களக்காடு புலிகள் காப்பகத்தில் முதல் முறையாக வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணிக்கு செல்போன் ஆப் பயன்படுத்தப்படுகிறது. இதற்கான பயிற்சி முகாம் நடந்தது.
நெல்லை மாவட்டம், களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் 500 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் களக்காடு புலிகள் காப்பகம் அமைக்கப்பட்டு, புலி, சிறுத்தை, யானை, கரடி, செந்நாய், கடமான், ராஜநாகம், கருமந்தி, சிங்கவால் குரங்கு உள்ளிட்ட வனவிலங்குகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இங்கு வாழும் வனவிலங்குகள் குறித்து ஆண்டு தோறும் கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வனவிலங்குகளை நேரில் காண்பது, அவைகளில் எச்சங்கள், கால்தடங்களை சேகரிப்பது போன்ற முறைகளில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. மேலும் கணக்கெடுப்பு குழுவினர் கணக்கெடுப்பு விபரங்களை அதற்கான ஆவணத்தில் பதிவு செய்வது வழக்கமாகும்.இந்நிலையில் இந்தாண்டு முதல் முறையாக கணக்கெடுப்பு பணிக்கு செல்போன் ஆப் பயன் படுத்தப்படுகிறது. இனி கணக்கெடுப்பு குழுவினர் விபரங்களை செல்போன் ஆப்பில் தான் பதிவு செய்ய வேண்டும். இதையொட்டி கணக்கெடுப்பு பணியில் ஈடுபடவுள்ள வனத்துறை ஊழியர்களுக்கு செல்போன் ஆப்பை பயன்படுத்துவது குறித்து சிறப்பு பயிற்சி முகாம் களக்காடு தலையணையில் நேற்று நடந்தது.

களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் ரமேஸ்வரன் பயிற்சி முகாமை தொடங்கி வைத்தார். வனசரகர் (பொ)கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். அதனைதொடர்ந்து செல்போன் ஆப் மூலம் வனவிலங்குகளை கணக்கெடுப்பது குறித்து ஸ்ரீதர் பயிற்சி அளித்தார். இதில் களக்காடு, திருக்குறுங்குடி, கோதையாறு வனசரகங்களை சேர்ந்த வனவர்கள், வனக்காப்பளர்கள், வன காவலர்கள், வேட்டைத் தடுப்புக் காவலர்கள் 80 பேர் கலந்து கொண்டனர். இவர்களுக்கு கள பயிற்சியும் அளிக்கப்பட்டது.

Tags : Calakadu Tigers , Kanyakumari: Periyasamy (64) hails from Chottapanikkan Therivilai near Thendamaraikulam. Farmer. Of the Bharatiya Kisan Sangam
× RELATED தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு இயல்பைவிட...