×

மாற்றுத்திறனாளி உயிரிழந்த விவகாரம்; புலன் விசாரணை பிரிவு டிஜிபி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்; மனித உரிமை ஆணையம் உத்தரவு

சென்னை: நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் பகுதியைச் சேர்ந்த மளிகைக் கடை உரிமையாளர் வீட்டில் நடந்த நகை திருட்டு வழக்கில், சந்தேகத்தின் அடிப்படையில் சேலம் கருப்பூரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான பிரபாகரனை சேந்தமங்கலம் போலீசார் கைது செய்து நாமக்கல் கிளை சிறையில் அடைத்தனர். உடல்நிலை சரியில்லை என்று பிரபாகரனை சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அன்றிரவே அவர் உயிரிழந்தார். பிரபாகரனின் மரணம் தொடர்பாக சேந்தமங்கலம் காவல் உதவி ஆய்வாளர் உட்பட 3 பேர் சேலம் டிஐஜியால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில் இது தொடர்பாக பத்திரிகைகளில் வெளியான செய்தியின் அடிப்படையில் மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. மேலும் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி ஆறு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்யும்படி, மனித உரிமை ஆணைய புலன் விசாரணை பிரிவு இயக்குனருக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் காவல் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை பெறவும் ஆணையத்தின் தலைவர் நீதிபதி பாஸ்கரன்  உத்தரவிட்டுள்ளார்.



Tags : Investigation Division ,Human Rights Commission , The case of the death of a disabled person; The Investigation Division is required to file a DGP report; Order of the Human Rights Commission
× RELATED தோகாவில் இருந்து சென்னைக்கு...