×

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் 4வது சுற்றில் அசரென்கா, சக்காரி

மெல்போர்ன்: ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த 3வதுசுற்று போட்டியில், பெலாரசின் விக்டோரியா அசரென்கா, 6-0, 6-2 என்ற செட் கணக்கில் உக்ரைனின் எலினா ஸ்விட்டோலினாவை வீழ்த்தினார். அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, 7-6, 6-2 என ஸ்பெயினின் நூரியாபாரிசாசை வென்றார்.

5ம் நிலை வீராங்கனையான மரியா சக்காரி, 6-4, 6-1 என்ற செட் கணக்கில் ரஷ்யாவின் வெரோனிகா குடெர்மெடோவாவை வீழ்த்தி 4வது சுற்றுக்குள் நுழைந்தார். செக்குடியரசின் பார்போரா கிரெஜ்சிகோவா, 2-6, 6-4, 6-4 என லாத்வியாவின் ஜெலினா ஆஸ்டாபென்கோவை வீழ்த்தினார். ஸ்பெயினின் பவுலா படோசா, 6-2, 5-7, 6-4 என்ற செட் கணக்கில், உக்ரைனின் மார்டா கோஸ்ட்யுக்கை வீழ்த்தி கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்குள் நுழைந்தார்.

Tags : Azarenka ,Zachary ,Australian Open , Australia, Open Tennis, Azarenka, Zachary
× RELATED சார்ல்ஸ்டன் ஓபன் டென்னிஸ் அரையிறுதியில் ஜெஸிகா பெகுலா