×

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே அரசு மருத்துவர் மீது தாக்குதல் நடத்திய வட்டார சுகாதார ஆய்வாளர் உள்பட 3 பேர் கைது!: போலீசார் விசாரணை..!!

கடலூர்: காட்டுமன்னார்கோவில் அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் அரசு மருத்துவரை தாக்கியதாக வட்டார சுகாதார ஆய்வாளர் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். கடலூர் மாவட்டம் வாண்டையார் இருப்பு  கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 20 மாதங்களுக்கு முன்பு விக்ரமன் என்ற மருத்துவர் பணியமர்த்தப்பட்டார். இந்நிலையில் அவரை சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனையில் கொரோனா வார்டில் பணிபுரிய வட்டார மருத்துவ ஆய்வாளர் குணபாலன் இடமாற்றம் செய்துள்ளார். அங்கு பணியாற்றிய மருத்துவர் விக்ரமன் ஒருநாள் விடுமுறையில் இருந்த போது அவசர தேவைக்காக வாண்டையார் இருப்பு மருத்துவமனைக்கு வந்து மருத்துவம் பார்த்துள்ளார். 
இதனையறிந்த குணபாலன் அவரது ஓட்டுநர் மற்றும் தற்காலிக பணியாளர் ஒருவருடன் வந்து சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. மருத்துவமனையில் இருந்த மருத்துவரை தாக்கியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து குமராட்சி காவல் நிலையத்தில் மருத்துவர் விக்ரமன் அளித்த புகாரின் பேரில் அவர்கள் மூன்று பேரையும் கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். வட்டார மருத்துவ அலுவலர் குணபாலனுக்கு மருத்துவர் விக்ரமன் மீது இருந்த காழ்புணர்ச்சியால் தாக்குதல் நடத்தி இருப்பதாக கிராமமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ஆய்வுக்கு  சென்ற போது விக்ரமன் தங்களை தாக்கியதாக  வட்டார மருத்துவ அலுவலர் குணபாலன் போலீசில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக குமராட்சி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

The post கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே அரசு மருத்துவர் மீது தாக்குதல் நடத்திய வட்டார சுகாதார ஆய்வாளர் உள்பட 3 பேர் கைது!: போலீசார் விசாரணை..!! appeared first on Dinakaran.

Tags : Kattumannarkoil ,Cuddalore ,Kattumannarkovil ,
× RELATED யூ டியூப் பார்த்து பெட்ரோல் குண்டு தயாரித்து வீசிய ‘குடிமகன்’ கைது