×

கந்தர்வகோட்டையில் சம்பா அறுவடைக்கு தயார் மயில்கள் கூட்டத்திடமிருந்து பாதுகாக்க வரப்போரம் சேலைகட்டும் விவசாயிகள்

கந்தர்வகோட்டை : கந்தர்வகோட்டையில் சம்பா அறுவடைக்கு பயிர்கள் தயாராக உள்ளதால் மயில்கள் கூட்டத்திடமிருந்து பயிர்களை பாதுகாக்க வரப்போரம் விவசாயிகள் சேலை கட்டி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை பகுதிகளில் வடகிழக்கு பருவமழையும், அதனைத் தொடர்ந்து பெய்த தொடர் மழையால் விவசாயிகள் நல்ல முறையில் விவசாயம் செய்து வருகிறார்கள். இதில் ஒரு சிலர் பிந்தைய நடவு செய்ததால் கதிர் பரிந்து நெல் முற்றிய நிலையில் அறுவடைக்கு தயாராக உள்ளது.

இதனை அறுவடை செய்ய ஆட்கள் கிடைக்காததாலும்,அறுவடை இயந்திரம் கிடைக்காததாலும் அறுவடைக்கு காத்திருக்கும் வேளையில் இந்திய தேசியப் பறவையான மயில்கள் வயல்களில் இறங்கி நெற்கதிர்களை சேதாரம் செய்து வருகிறது. இதனை தடுக்கும் வண்ணம் வயல்களில் உள்ள வரப்புகளை சுற்றிலும் பெண்களின் சேலைகளால் நெல் கதிர்களை மறைக்கும் வண்ணம் கட்டியுள்ளனர். இதனைக் கொண்டு நெல் கதிர்களை மயில்களிடம் இருந்து காத்து வருகிறார்கள்.

Tags : Kandarwakottai , Gandarvakkottai,Peaacock,Saree, Farmers
× RELATED கந்தர்வகோட்டை பகுதியில் காய்கறி செடிகள் அமோக விற்பனை