தமிழகத்தில் முதல்முறையாக குன்னூரில் கோழி, மீன் கழிவுகள் மூலம் உரம் தயாரிப்பு

குன்னூர் :  தமிழகத்தில் முதல்முறையாக குன்னூரில் கோழி மற்றும் மீன் கழிவுகளில் இருந்து உரம் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றது.  குன்னூர் பொது மக்கள் குப்பைகளை ஆறுகளிலும் ஓடைகளிலும் வீசி வந்தனர். இதனால் வன விலங்குகளின் குடிநீர் கடுமையாக மாசடைந்து வந்தது. அது மட்டுமின்றி  குன்னூர் ஓட்டுப்பட்டறை அருகே நகரில் தினசரி சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் மலைபோல் குவிக்கப்பட்டு வந்தது‌.

துர்நாற்றம் வீசி வந்த நகராட்சி குப்பை குழியால் அந்த பகுதியில் குடியிருக்கும் மக்கள் கடும் அவதிப்பட்டு வந்தனர்.  நகராட்சி நிர்வாகம் மற்றும் (க்ளீன் குன்னூர்)  தன்னார்வ அமைப்பு இணைந்து குப்பை மேடாக இருந்த இடத்தை சுத்தம் செய்து கழிவு மேலாண்மை பூங்காவாக மாற்றியுள்ளனர். குன்னூர் நகராட்சியில் சேகரிக்கப்படும்  மட்கும் குப்பை மற்றும் மட்கா குப்பைகள் பிரிக்கப்பட்டு, ‘பேலிங்’ இயந்திரம் மூலம் ‘பிளாஸ்டிக் பேக்கேஜ்’ செய்து, பர்னஸ் ஆயில் தயாரிக்க, அனுப்பப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் முதல்முறையாக குன்னூர் நகராட்சியில் கோழி மற்றும் மீன் கழிவுகளில் இருந்து உரம் தயாரிப்பு  துவங்கப்பட்டு வெற்றி காணப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், குன்னூர் நகராட்சியில் மட்கும் மட்காத குப்பைகள் தனித்தனியாக சேகரிக்கப்பட்டு வருகிறது. இவை குன்னூர் ஓட்டுப்பட்டரையில் உள்ள குப்பை கிடங்குக்கு கொண்டுவரப்பட்டு பிரித்து பல்வேறு மறுசுழற்சி  பயன்பாடுகளுக்கு  பயன்படுத்தப்படுகிறது.

இந்த நிலையில் குன்னூர் மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கோழிக்கழிவுகள், மீன் கழிவுகள் கொண்டு செல்லப்பட்டாலும் மறுசுழற்சிக்கு பயன்படுத்தாமல் குழிதோண்டி புதைக்கும் நிலை உள்ளது. சில இடங்களில் வனப்பகுதிகளில் கொட்டுவதாலும் சுகாதாரம் பாதிக்கிறது. இந்த நிலையில் குன்னூர் நகராட்சியின் முயற்சியால் கிளீன் குன்னூர் தன்னார்வ அமைப்பு உதவியுடன் இந்த கழிவுகளில் இருந்த புதிய முயற்சி க்கு திட்டமிடப்பட்டது. இதில் கோழி, மீன்கழிவுகளுடன் வாழைத்தார் உள்ளிட்ட நார் கழிவுகளும் குறிப்பிட்ட வெப்பநிலையில் அரைக்கப்படுகிறது.

பிறகு  காற்று வெளிச்சம் உள்ள பகுதியில்  விண்ட் ரோ எனப்படும் முறையில் பதப்படுத்தப்படுகிறது. மேலும் 30 நாட்கள் வரை குறிபிட்ட வெப்பநிலையில் மாற்றி மாற்றி பதப்படுத்தப்படுகிறது. இதனை தொடர்ந்து உரமாக மாறியுள்ளது. இந்த முயற்சி தமிழகத்தில்  முதல் முறையாக  நடத்தி வெற்றி காணப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதன் தரம் குறித்து சோதனைக்கு கோவையில் உள்ள ஆய்வகத்துக்கு மாதிரி அனுப்பப்பட்டது.

 இதில், 1985ம் ஆண்டின் மத்திய அரசின் ‘பெர்டிலைசர் கன்ட்ரோல் உத்தரவின் மதிப்பீட்டில், இந்த உரம் முதல் கிரேடு பெற்றுள்ளது. விவசாயிகளுக்கு ஆர்கானிக் எனும் இயற்கையான உரமாக பயன்படுத்த வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் கிடைக்கும் நிதி தூய்மை பணியாளர்களுக்கு சம்பளம் வழங்குதல் உள்ளிட்டவைகளுக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Related Stories: