×

இசை, நாட்டியத்திற்கு தன் ஆயுளை அர்ப்பணித்துக்கொண்டவரே, ‘உன்னை காணாது நான் இன்று நானில்லையே’: பண்டிட் பிர்ஜூ மறைவுக்கு கமல் ட்வீட்..!!

சென்னை: இசைக்கும் நாட்டியத்திற்கும் தன் ஆயுளை அர்ப்பணித்துக்கொண்டவரே, ‘உன்னை காணாது நான் இன்று நானில்லையே’ என்று பண்டிட் பிர்ஜூ மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ஈடு இணையற்ற நடனக் கலைஞரான பண்டிட் பிர்ஜூ மகராஜ் மறைந்தார். ஓர் ஏகலைவனைப் போல பல்லாண்டுகள் தொலைவிலிருந்து அவதானித்தும், விஸ்வரூபம் படத்திற்காக அருகிருந்தும் நான் கற்றுக்கொண்டவை ஏராளம். இசைக்கும் நாட்டியத்திற்கும் தன் ஆயுளை அர்ப்பணித்துக்கொண்டவரே, ‘உன்னை காணாது நான் இன்று நானில்லையே’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.


Tags : Kamal ,Pandit Birju , Music, Dance, Pandit Birju, Kamal
× RELATED Kamal Haasan இல்லாம நான் இல்ல - Sidharth Speech at Indian 2 Press Meet | Shankar | Kamal | Dinakaran