×

விஜயவாடா, ஜெர்மனியில் இருந்து சென்னைக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகள், வென்டிலேட்டர்கள் வந்தன

சென்னை: ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து இந்திய விமானப்படை விமானத்தில் 56 ஆக்சிஜன் செறிவூட்டிகள், 60 வென்டிலேட்டர்கள், 25 டிராலியுடன் கூடிய வென்டிலேட்டர்கள் சென்னை வந்தன. மேலும் 4 ஆக்சிஜன்  செறிவூட்டிகள் ஜெர்மனியில் இருந்து 4 சரக்கு விமானத்தில் வந்தன. ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து இந்திய விமானப்படை தனி விமானம் நேற்று முன்தினம் மாலை சென்னை பழைய விமான நிலையம் வந்தது. அதில் 56 ஆக்சிஜன் செறிவூட்டிகள், 60 வென்டிலேட்டர்கள், டிராலியுடன் இணைக்கப்பட்ட வென்டிலேட்டர்கள் 25 மற்றும் மருத்துவ உபகரணங்கள் வந்தன. இந்திய விமான படையினர் கண்காணிப்பில் விமான நிலைய லோடர்கள், அந்த மருத்துவ உபகரணங்கள் அடங்கிய பார்சல்களை கீழே இறக்கி, விமான நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். பின்னர், தமிழக அரசு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. அவர்கள், வாகனங்களில் ஏற்றி சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதேபோல ஜெர்மனியில் இருந்து நேற்று முன்தினம் இரவு சென்னைக்கு வந்த சரக்கு விமானத்தில், 4 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வந்தன. சுங்கத்துறையினர், மருத்துவ உபகரணங்களுக்கான முன்னுரிமை அளித்து, அவற்றை உடனடியாக அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்….

The post விஜயவாடா, ஜெர்மனியில் இருந்து சென்னைக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகள், வென்டிலேட்டர்கள் வந்தன appeared first on Dinakaran.

Tags : Chennai ,Vijayawada, Germany ,Indian Air Force ,Andhra State ,Vijayawada ,Vijayawada, Chennai ,Germany ,
× RELATED ராஜஸ்தான் அருகே இந்திய...