×

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவின் புதிய தலைவராக சோமநாத் நியமனம் செய்து ஒன்றிய அரசு உத்தரவு

டெல்லி: இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவின் புதிய தலைவராக சோமநாத் நியமிக்கப்பட்டுள்ளார்.இஸ்ரோவின் தற்போதைய தலைவராக இருக்கும் சிவனின் பதவிக்காலம் முடிவடைவதைத் தொடர்ந்து புதிய தலைவருக்கான ஆலோசனை நடைபெற்று வந்த நிலையில் சோமநாத் தேர்ந்தெடுக்கப்படுவதாகவும் அடுத்த 3 ஆண்டுகள் இப்பதவியில் நீடிப்பார் என்றும் ஒனறிய அரசு அறிவித்துள்ளது.

இஸ்ரோவின் தற்போதைய தலைவரான சிவன் அவர்களின் பதவிக்காலம் நிறைவடைந்துள்ள நிலையில், புதிய தலைவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதன்படி, ஒன்றிய அரசு இஸ்ரோவின் தலைவராக சோமநாத் என்பவரை நியமனம் செய்துள்ள நிலையில், அடுத்த 3 ஆண்டுகளுக்கு இவர் இஸ்ரோவின் தலைவராக பதவி வகிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இஸ்ரோவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சோமநாத், விக்ரம் சாராபாய் விண்வெளி மைய இயக்குனராக அவர் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Somnath ,Indian Space Research Organization ,ISRO , Somnath appointed President of Indian Space Research Organization
× RELATED இந்தியாவில் வெப்ப அலையின் தாக்கம்...