×

இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலிடம், நடிகர் சித்தார்த் மன்னிப்பு கோரினார்

டெல்லி : இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலிடம், நடிகர் சித்தார்த் மன்னிப்பு கோரினார். நடிகர் சித்தார்த் வெளியிட்டுள்ள பதிவில்,உங்கள் ட்வீட்டில் பதிவிட்ட, சரியாக புரிந்து கொள்ளப்படாத எனது நகைச்சுவைக்கு மன்னிப்பு கோருகிறேன்.எனது ட்வீட் வார்த்தை நகைச்சுவையானது மட்டுமே, உள்நோக்கம் கொண்டது அல்ல.நீங்கள் எப்போதும் என் சாம்பியனாக இருப்பீர்கள்,என்றார். பஞ்சாப்பில் பிரதமர் மோடியின் பாதுகாப்பு குறைபாடு குறித்த சாய்னாவின் பதிவுக்கு, சித்தார்த் சர்ச்சை ட்வீட் செய்திருந்தார்.


Tags : Siddharth ,Saina Nehwal , இந்திய பேட்மிண்டன், வீராங்கனை ,சாய்னா நேவால், நடிகர் சித்தார்த்
× RELATED அதிதியுடன் திருமணம் எப்போது? சித்தார்த் பதில்