கொரோனா அறிகுறியோடு இருப்பவர்களுக்கு ஆக்சிஜன் அளவு 92க்கு கீழ் இருந்தால் மருத்துவமனையில் அனுமதி: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: திருவான்மியூரில் கொரோனாவால் வீட்டு தனிமையில் இருப்பவர்களுக்கு பல்ஸ் ஆக்ஸிமீட்டர் கருவியை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று நேரில் சென்று வழங்கினார். பின்னர் அவர் அளித்த பேட்டி: கொரோனாவால் பாதிக்கப்பட்ட 21 ஆயிரத்து 987 பேர்  அவர்களின் வீடுகளிலே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களை காண்காணிக்கும் வகையில் 15 மண்டலங்களிலும் மருத்துவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் என 178 பேர்  பொதுமக்களிடம் தொலைபேசி மூலம் ஆலோசனைகளை வழங்கி வருகிறார்கள். மேலும், ஒரு வட்டத்திற்கு 5 பேர் வீதம் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டு 1000 தன்னார்வலர்கள் களப்பணி ஆற்றி வருகிறார்கள்.

திருவான்மியூர்  மாடி குடியிருப்பில் 10க்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று இருந்த நிலையில், அவர்களின் குடும்பத்திற்கு 1 பல்ஸ் ஆக்ஸி மீட்டர் வழங்கப்பட்டது. ஆக்சிஜன் அளவு 92க்கு கீழே வரும் பட்சத்தில் மட்டுமே, மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும். 92க்கு மேல் இருப்பவர்கள் வீடுகளிலே தனிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.

ஒமிக்ரான் பரிசோதனை நிறுத்தம்

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: தொற்று பரிசோதனைக்காக வருபவர்களில் 85 சதவீதம் பேருக்கு ஒமிக்ரான் அறிகுறி இருக்கிறது. இப்போது, வரும் பாதிப்பு எல்லாமே எஸ் ஜீன் வகையை சேர்ந்தது. அதனால், ஒமிக்ரான் பரிசோதனை செய்யப்படுவதில்லை. ஆனால், புதிய வைரஸ் பரவுகிறது என்றால் பாதிக்கப்பட்டவர்களை பரிசோதனைக்கு அனுப்பி வைக்கிறோம்.

Related Stories: