×

கந்தர்வகோட்டை பகுதியில் மஞ்சள் கொத்து அமோக விளைச்சல்

கந்தர்வகோட்டை : கந்தர்வகோட்டை பகுதியில் மஞ்சள் செடிகள் அமோகமாக விளைந்துள்ளது.தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் வருகிற 14ம் தேதி (தை முதல்நாள்) தமிழகத்தில் கோலாகலமாக கொண்டாப்படும். தைப்பொங்கல் என்றதும் முதலாவதாக நினைவுக்கு வருவது செங்கரும்பு. அதற்கு அடுத்தபடியாக பொங்கல் சீர்வரிசையில் இடம் பிடிப்பது மஞ்சள்கொத்து.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே மருங்கூரணி கிராமத்தில் தைப்பொங்கலுக்கு தேவையான மஞ்சள் செடிகள் பயிரிடப்பட்டு அமோக விளைச்சலில் உள்ளது. தைப்பொங்கலுக்கு புதுமணத் தம்பதிகளுக்கு சீர்வரிசை கொடுக்க மணமகள் வீட்டார்கள் மஞ்சள் கொத்து வாங்குவார்கள். இந்நிலையில் மஞ்சள் கொத்தின்விலை கடும் உயர்ந்து உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். விலை உயர்விற்கான காரணம் குறித்து மஞ்சள் கொத்து வியாபாரி மாரியம்மாள் என்பவரிடம் கேட்டபோது, தற்சமயம் பெய்த மழையின் காரணமாக தஞ்சை மாவட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த மஞ்சள் கொத்துகள் அனைத்தும் அழுகி விட்ட காரணத்தால் தஞ்சை மாவட்டத்திலிருந்து நமது (கந்தர்வகோட்டை) பகுதியில் வந்து மொத்த விலைக்கு வாங்கி முன் தொகை கொடுத்து விட்டார்கள்.

ஆகையால் மீதம் இருப்பதை நாம் விற்பனை செய்யும்போது சற்று விலை கூடுதலாக தெரிவதாக மஞ்சள் கொத்துவாங்குபவர்கள் கூறுவதாக தெரிவித்தார். மேலும் மஞ்சள் பயிர் விளைச்சல் என்பது 6 மாத காலம் கொண்டது எனவும், இதற்கு தினசரி தண்ணீர் பாச்ச வேண்டும் என்றும், தண்ணீர் அதிகமானால் செடி அழுகிவிடும், தண்ணீர் இல்லை என்றால் செடி வாடி விடும் என்று கூறினார். தமிழர் திருநாளாம் தைத்திருநாள் அன்று சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கலும் மண்பானையில் வைத்து அதற்கு மஞ்சள் கொத்தை கட்டி சாமி கும்பிடும்போது ஏற்படுகின்ற மகிழ்ச்சி அளவற்றது என தெரிவித்தார்.

Tags : Kandarwakottai , Kandarwakottai: In the Kandarwakottai area, yellow plants have grown in abundance.
× RELATED பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று...