×

மயிலாடுதுறை மாவட்ட மதிமுக பொறுப்பாளர் நியமனம்

சென்னை: மயிலாடுதுறை மாவட்ட மதிமுக பொறுப்பாளராக மார்கோனி நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மதிமுக மயிலாடுதுறை மாவட்டப் பொறுப்பாளர் மோகன் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, மதிமுக அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினராக நியமிக்கப்படுகிறார். இளைஞர் அணி மாநில துணைச் செயலாளர் இ.மார்கோனி அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, மயிலாடுதுறை மாவட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : District of ,Mayiladurah , Mayiladuthurai District Magistrate appointed
× RELATED ஆந்திரா மாநிலம் சித்தூர்...