×

கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் 433 குழந்தைகளுக்கு ரூ.5.10 கோடி நிவாரணம்: கலெக்டர் தகவல்

திருவள்ளூர்: கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த 433 குழந்தைகளுக்கு ₹5.10 கோடி நிவாரண உதவி தொகை வழங்கப்பட்டதாக கலெக்டர் ஆல்பிஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை.தமிழகத்திலும் கொரோனாவால் பல்வேறு உயிரிழப்புகளும், நூற்றுக்கணக்கனோர் உடல் அளவிலும், மனதளவிலும் பாதித்து, குணமடைந்தனர். பல்வேறு துறைகள் ஒங்கிணைந்து செயல்பட்டதால், கொரோனா நோய் வீரியம் குறைந்து பலர் காப்பற்றப்பட்டனர்.

இதில், பெற்றோர்களை இழந்து, ஆதரவின்றி எதிர்காலமே கேள்விக்குறியாக குழந்தைகள் பாதிக்கப்பட்டன. அந்த குழந்தைகளின் எதிர்காலத்தை கருதி அவர்களுக்கு, தலா ₹5 லட்சம் வைப்பு தொகையும், தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளுக்கு ₹3 லட்சம் நிவாரணம் வழங்க தமிழக அரசு அறிவித்தது.

மேலும், கொரோனா தொற்றால் பெற்றோர்களை இழந்து உறவினர் அல்லது பாதுகாவலரின் ஆதரவில் வளரும் குழந்தைகளின் பராமரிப்பு செலவாக மாதந்தோறும் தலா ₹3 ஆயிரம் உதவித் தொகை, பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு அரசு இல்லங்கள் மற்றும் விடுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் தங்க இடம், பட்டப்படிப்பு வரை கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணம் உள்ளிட்டவைகளை அரசே ஏற்பதாக அறிவித்திருந்தது.

இதையொட்டி, திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைகள் 422, பெற்றோர்கள் இருவரையும் இழந்த குழந்தைகள் 11 என மொத்தம் 433 குழந்தைகள் கணக்கெடுப்பு மூலம் தெரியவந்தது. இதையடுத்து அவர்களுக்கு, நிவாரண உதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்
பட்டுள்ளது. முதற்கட்டமாக 166 பேருக்கு ₹5.10 கோடி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும், 256 குழந்தைகளின் விவரங்கள் சரிபார்ப்பு பணி முடிந்த பின் நிவாரண உதவித்தொகை வழங்கப்பட உள்ளது என்றார்.

Tags : Rs 5.10 crore relief for 433 children of corona victims: Collector
× RELATED கொடைகானல் மேல்மலை கிராமங்களில் பயங்ககரமான காட்டுத் தீ