×

செங்குன்றம் அருகே ஏலச்சீட்டு நடத்தி சுமார் ரூ.4 கோடி வரை மோசடி: தலைமறைவான 4 பேரை கைது செய்யக் கோரி பாதிக்கப்பட்டவர்கள் மனு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே ஏலச்சீட்டு நடத்தி சுமார் ரூ.4 கோடி வரை மோசடி செய்து தலைமறைவான 4 பேரை கைது செய்து தங்களது பணயத்தை திரும்பப்  பெற்று தருமாறு பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். செங்குன்றம் அடுத்த பாடியநல்லூரை சேர்ந்த பஞ்சவர்ணம், செல்வி, முனீஷ், குமரன், ராமச்சந்திரன் ஆகியோர் ஏலசீட்டு நடத்தி வந்தனர். ஆட்டந்தாங்கல் பகுதியை சேர்ந்த 100- க்கும் மேற்பட்டோர் சில ஆண்டுகளாக இவர்களிடம் மாதாந்திர ஏலசீட்டில் இணைந்து பணம் செலுத்தி வருகின்றனர்.

சுமார் ரூ.4 கோடி வரை பணம் செலுத்தப்பட்டு சீட்டு முதிர்வடைந்த நிலையில் பயனாளிகளுக்கு பணத்தை திருப்பித் தராமல் இவர்கள் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் பணத்தை திருப்பி பெற்று தர நடவடிக்கை எடுக்குமாறு ஆவடி காவலாணையர் அலுவலகத்தில் ஏற்கெனவே புகார் அளித்துள்ளனர். பொங்கல் பண்டிகை வரவுள்ள நிலையில் தங்களது பணத்தை விரைவாக பெற்றுத் தர உரிய நடவடிக்கை எடுக்க விடும் என பொதுமக்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.             


Tags : Chenkunram , Chengkunram, lottery ticket, Rs 4 crore, fraud, 4 persons, arrest, petition
× RELATED சென்னையில் தொடர்ந்து மழை கொட்டியதால்...