×

துணை மின்நிலையத்தில் தீ விபத்து ரூ.2 கோடி டிரான்ஸ்பார்மர் எரிந்து நாசம்-கன்னிவாடி அருகே பரபரப்பு

சின்னாளபட்டி : கன்னிவாடி அருகே துணை மின்நிலையத்தில் நேற்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் சுமார் ரூ.2 கோடி மதிப்பிலான டிரான்ஸ்பார்மர் எரிந்து நாசமானது.
திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி அருகே ஆலந்தூரான்பட்டியில் துணை மின்நிலையம் உள்ளது. இங்குள்ள டிரிப்பர் பழுதடைந்ததால் ேநற்று காலை துணை மின்நிலையத்தில் இருந்த டிரான்ஸ்பார்மர் ஆயில் அதிக வெப்பமாகி வெடித்து தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்து வந்த ஆத்தூர், ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் தீயணைப்பு நிலைய வீரர்கள், டிரான்ஸ்பார்மில் எரிந்த தீயை போராடி அணைத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சுப்ரமணியன் தலைமையிலான பணியாளர்கள் மின்விபத்து குறித்து ஆய்வு செய்தனர்.

மின்வாரிய உயரதிகாரி கூறுகையில், ‘‘செம்பட்டியில் உள்ள 230 கேவி துணை மின் நிலையத்திலிருந்து கன்னிவாடியில் உள்ள 110 கேவி துணை மின்நிலையத்திற்கு மின்சாரம் வருகிறது.
இந்த டிரான்ஸ்பார்மில் உள்ளே இருக்கும் ஆயில் அதிக வெப்பநிலை அடைந்து வெடித்து ஆயில் வெளியேறியதால் தீப்பிடித்து எரிந்தது.

சாதாரணமாக 65 டிகிரி முதல் 75 டிகிரி வரை தான் வெப்பம் இருக்கும். மின்விபத்து, மின்தடை இருக்கும்போதுதான் வெப்பம் அதிகரிக்கும். இந்த டிரான்ஸ்பார்மரில் 110 டிகிரிக்கு மேல் வெப்பம் அதிகரித்ததால், ஆயில் சீல் வெடித்து ஆயில் வெளியேறியதால் தீப்பிடித்து எரிந்துள்ளது. மின்விபத்தால் சுமார் ரூ.2 கோடி மதிப்புள்ள மின் சாதனங்கள் எரிந்து நாசமாகி விட்டன’’ என்றார்.

Tags : Nasam-Kannywadi , Chinnalapatti: A fire broke out at a substation near Kanniwadi yesterday. Of this, about Rs 2 crore is worth of transformers
× RELATED வேலூர் மாநகராட்சியில் 25க்கும்...