×

1000 ஏக்கர் நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதம்: விதை நெல்லுக்காக நெற்பயிரை அறுவடை செய்யும் விவசாயிகள்

இராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் திரிபுலானி சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் மானாவாரி பயிராக 1000 ஏக்கர் பரப்பளவில் நெல்சாகுபடி செய்திருந்தனர். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கனமழை காரணமாக புதுவூர், நேர்புறம், மேதலோடை, வெள்ளையன்வலசை, மொட்டையன்வலசை, அய்யனார்புரம் உள்ளிட்ட பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் மழைநீரில் மூழ்கி நெல்மணிகள் முளைத்து சேதமடைந்தன. இதனால் விவசாயிகள் வேறு வழியின்று விதை நெல்லின் தேவைக்காக மூழ்கிய நெற்கதிர்களை அறுவடை செய்து வருகின்றனர்.

ஒரு ஏக்கருக்கு ரூ. 20,000 முதல் ரூ. 25,000 வரை செலவு செய்து பயிரிட்ட நெற்கதிர்கள் சேதமடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும் நெற்கதிர்களை அறுக்க கூலிக்கு கூட ஆள் கிடைக்காமல் அருகில் உள்ள கிராமங்களில் அதிக கூலி கொடுத்து ஆட்களை வரவழைத்து நீரில் மூழ்கிய நெற்கதிர்களை அறுவடை செய்து வருகின்றனர். ஆகவே மாவட்ட நிர்வாக அதிகாரிகள் உரிய ஆய்வு நடத்தி விவசாயிகளுக்கு உரிய இழப்பேடு வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.      


Tags : 1000 acres, paddy, rain water, damage, seed paddy, paddy, harvest, farmers
× RELATED நடிகர் சங்க கட்டட பணிகளுக்காக...