×

பல்ஸ் ஆக்சிமீட்டர் மூலம் ஆக்சிஜன் அளவை கண்காணிக்க வேண்டும்: வீட்டு தனிமையில் இருப்பவர்களுக்கு சென்னை மாநகராட்சி வேண்டுகோள்

சென்னை: கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு வீட்டு தனிமையில் இருப்பவர்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டி நெறிமுறைகளை சென்னை மாநகராட்சி வெளியிட்டள்ளது. கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு வீட்டு தனிமையில் இருப்பவர்கள் பின்பற்ற வேண்டியவை குறித்து சென்னை மாநகராட்சி கூறியதாவது: தனி கழிவறையுடன் கூடிய காற்றோட்டம் உள்ள தனிஅறையில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும், வீட்டில் உள்ளவர்கள் உங்கள் அறையில் நுழையக் கூடாது, சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும், மற்றவர்களிடம் தொடர்பு இல்லாதவாறு உணவை பெற்றுக்கொள்ளுங்கள், போதுமான அளவு தண்ணீர், பழரசம் குடிக்கவும், பிறரிடம் பேசுவதை தவிர்த்து விடுங்கள், மீறி தொடர்பு கொள்ள நேரிட்டால் சர்ஜிக்கல் அல்லது என் 95 முகக்கவசம் அணிந்து பேசுங்கள், போதிய ஓய்வும், தூக்கமும் அவசியம், சோர்வு ஏற்படுத்தும் செயல்கள் செய்வதை தவிர்க்க வேண்டும்.

மேலும் அடிக்கடி சோப்பு உபயோகித்து குறைந்தது 20 நொடிகள் நன்கு தேய்த்து நன்றாக கைகளை கழுவுங்கள் அல்லது ஆல்கஹால் கலந்து கிருமி நாசினியை பயன்படுத்துங்கள், மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை மட்டும் சரியான நேரத்திற்கு எடுத்துக் கொள்ளுங்கள், உங்கள் துணிகள் மற்றும் பாத்திரங்களை நீங்களே சுத்தம் செய்யுங்கள், பொருட்களை மற்றவர்களிடம் பகிரக் கூடாது. கழிவுகளை தனி பையில் சேகரித்து அப்புறப்படுத்த வேண்டும், பல்ஸ், ஆக்சிமீட்டர் மூலம் ஆக்சிஜன் அளவையும், அபாய அறிகுறிகளையும் கண்காணிக்க வேண்டும். இவ்வாறு சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

Tags : Chennai Corporation , Oxygen levels should be monitored with a pulse oximeter: Chennai Corporation appeals to home loners
× RELATED கோடை வெப்பத்தை எதிர்கொள்ள சென்னையில் 188 இடங்களில் தண்ணீர் பந்தல்..!!