விழுப்புரம் அருகே மாணவியை கூட்டு பலாத்காரம் செய்த 80 வயது முதியவர்: போக்சோவில் கைது

செஞ்சி: விழுப்புரம் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 11ம் வகுப்பு மாணவி. இவருக்கு நேற்று முன்தினம் கை, கால்களில் வலி ஏற்படவே உறவினர்கள் முண்டியம்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றனர். மருத்துவர்கள் பரிசோதனை செய்து கர்ப்பமாக இருப்பதாக கூறினர். செஞ்சி அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தியதில், அதே ஊரை சேர்ந்த மோகன் (80), மண்ணாங்கட்டி (எ) வெங்கடேசன் (30), இளையராஜா (28) ஆகிய 3 பேரும் மாணவியை கூட்டு பலாத்காரம் செய்தது தெரியவந்தது. அவர்கள் 3 பேரையும் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories: