திண்டுக்கல் மாவட்டம் ஆழந்தூரன்பட்டியிலுள்ள துணைமின் நிலையத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே உள்ள ஆழந்தூரன்பட்டியிலுள்ள துணைமின் நிலையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஆழந்தூரன்பட்டியை சுற்றியுள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று காலை ஆழந்தூரன்பட்டியிலுள்ள துணைமின் நிலையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

தீ மளமளவென அப்பகுதி முழுவதும் பரவிய நிலையில் தகவலறிந்து திண்டுக்கல், கன்னிவாடி, ஒட்டன்சத்திரம் மற்றும் ஆத்தூர் ஆகிய பகுதிகளிலிருந்து தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தீ விபத்து காரணமாக ஆழந்தூரன்பட்டியை சுற்றியுள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு தற்போது மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் எவ்வாறு தீ விபத்து ஏற்பட்டது என போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: